

லெஜண்ட் சரவணனின் சமீபத்தில் வெளியான ஆக்ஷன் படமான 'லீடர்' திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கி இருக்கிறார். 2022, ஆண்டு வெளியான அவரது முதல் படமான 'தி லெஜெண்ட்' திரைப்படம் சமூகவலைத்தளங்களில் பல ட்ரோலிங்கைச் சந்தித்தது. ஆனாலும் கூட சினிமாவில் தன்னை ஒரு கமர்ஷியல் நாயகனாக நிலைநிறுத்த முனைகிறார். படக்குழுவினர் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பார்வையாளர்களிடையே கைதட்டல்களைப் பெறும் காட்சிகளில் கவனம் செலுத்தியுள்ளதால், 'லீடர்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
'லீடர்' திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு சுமாரான தொடக்கத்தையேப் பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளில் 75 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. இப்படம் 850 காட்சிகளில் திரையிடப்பட்டது, மேலும், தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. பல பார்வையாளர்கள் 'லீடர்' திரைப்படத்தை, ஒரு வணிக ரீதியான பொழுதுபோக்குத் திரைப்படம் என்று குறிப்பிட்டனர். ரசிகர்களின் கருத்துப்படி, படம் ஆரம்பத்தில் விறுவிறுப்படைய நேரம் எடுத்துக்கொண்டாலும், போகப்போக சுவாரஸ்யமாகிறது என்று கூறினர். முதல் பாதிக்குப் பிறகு இரண்டாம் பாதி ரசிக்கும்படியாக இருப்பதாகப் பல சமூக ஊடகப் பயனர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். பலர் இப்படத்தை வணிகப் படம் என்றே தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
மேலும், லெஜண்ட் சரவணனின் நடிப்பு முந்தைய படத்தை விட தற்போது சிறப்பாகவே இருப்பதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர். இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை, பல காட்சிகளை மெருகூட்டியிருப்பதாக கூறுகின்றனர். லெஜண்ட் சரவணனுடன், ஆண்ட்ரியா ஜெரெமையா, ஷாம், லால் மற்றும் பாயல் ராஜ்புத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வணிக ரீதியாக உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்துடம் நல்ல வரவேற்பையே பெற்றுவருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.