பிரபல ரவுடியின் கொலை பட்டியலில் இருந்த நடிகர்! துப்பாக்கி சூட்டில் தப்பித்த டைகர் ஷெராஃப் - சல்மான் கானுடன் இருந்த தொடர்புதான் காரணமா?

"சல்மான் கானுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்" என்பதாலும் டைகர் ஷெராஃப் தங்கள் கொலைப் பட்டியலில் இருந்ததாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
Tiger Shroff shooting
Tiger Shroff shooting
Published on: 
Updated on: 
1 min read

பிரபல பாலிவுட் நடிகரான டைகர் ஷெராஃப்-பை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதிலிருந்து எந்தவித காயங்களுமின்றி டைகர் ஷெராஃப் தப்பித்த நிலையில், அவரது கார் ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.

மும்பையின் ஜூஹூவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் நடந்தபோது டைகர் ஷெராஃப் ஒரு கால்பந்து மைதானத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர், வெளியான ஒரு காணொளியில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அனில் பண்டிட் என்பவர், "எங்கள் உத்தரவுகளை அவர் கேட்கவில்லை" என்பதாலும், "சல்மான் கானுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்" என்பதாலும் டைகர் ஷெராஃப் தங்கள் கொலைப் பட்டியலில் இருந்ததாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார். குஜராத்தில் சிறையில் இருக்கும் பிஷ்னோய், சல்மான் கானைக் கொலை செய்வதாக பலமுறை மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, நடிகர் டைகர் ஷெராஃப் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விவரங்களைப் பெறுவதற்காக, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மும்பை காவல் ஆணையரிடம் பேசிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த சம்பவம் குறித்த விசாரணையை விரைவுபடுத்தவும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அவர் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், டைகர் ஷெராஃபும் சல்மான் கானும் பல திரையுலகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் ஒரு முழு நீளத் திரைப்படத்தில் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், டைகர் ஷெராஃபின் தந்தை ஜாக்கி ஷெராஃப், சல்மான் கானுடன் பல முக்கியப் படங்களில் பணியாற்றியுள்ளதோடு, இருவரும் மேடைகளையும் பகிர்ந்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com