“காதுகளில் இருந்து எப்படி முடி வளரும் ?” தயாரிப்பாளரை கலாய்த்த சமந்தா? காரணம் என்ன?

“காதுகளில் இருந்து எப்படி முடி வளரும் ?” தயாரிப்பாளரை கலாய்த்த சமந்தா? காரணம் என்ன?
Published on
Updated on
1 min read

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் நடித்துள்ள இவர், அத்தனை மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான படம் தான் 'சாகுந்தலம்.பிரபல தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தெலுங்கு படமான இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 14-ம் தேதி திரையரங்கில் வெளியானது. பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இந்த படம் கடந்த 14-ம் தேதி ஒரு வெற்றிகரரமான வெளியானது.

இந்த நிலையில் தற்போது சிட்டி பாபுவுக்கு சமந்தாவே தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது சிட்டி பாபுவுக்கு காதில் முடி வளர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி “காதுகளில் இருந்து எப்படி முடி வளரும் ?” என்று கூகுளில் தேடியுள்ள ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து பதிவிட்டு 'IYKYK' (if you know, you know) என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

மந்தாவின் இந்த பதிலடி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அவரது இந்த பதில் சரி என்று ரசிகர்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அறிவித்தார். தொடர்ந்து இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர், பிரிவுக்கு பின்னர் உடல் மெலிந்து காணப்பட்டதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி கொடுக்கும் பேட்டிகளிலும் கண்கலங்கினார். இதனால் அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com