
இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா பயணியான மார்டின் லேவிஸ் என்பவர் தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள Fuvahmulah தீவில் விடுமுறையை கொண்டாடிய அவர், பொடி நடையாக நடந்து சுற்றுப்புற பகுதிகளை பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் தொடர் மழையால் தண்ணீர் தேங்கிய பகுதிக்கு வந்த அவர், உடை நனையாதபடி காலணிகளை கழற்றி கொண்டு நடக்க முயன்றுள்ளார். இதில் துரதிர்ஷடவசமாக அவர் சகதியில் மூழ்கவே சிரித்தபடி அவரது மனைவியும் அக்காட்சிகளை வீடியோ பதிவுசெய்து வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.