"புஷ்பா படம் பார்த்து என் பள்ளி மாணவர்கள் கெட்டுப் போய்விட்டனர்"! – டீச்சரின் அதிருப்தி

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான "புஷ்பா 2" படத்தை பார்த்து பல மாணவர்கள் மோசமாக நடந்து கொண்டதாக ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் அதிருப்தியுடன் கூறியுள்ளார், மேலும் அந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
pushpa 2
pushpa 2Admin
Published on
Updated on
1 min read

சுகுமார் இயக்கத்தில், "புஷ்பா 2" படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறி, ரூ.1871 கோடி வசூலித்துள்ளது. ஆனால், அதனைத் தொடர்ந்து, அந்த படத்தின் விளைவுகளைப்பற்றி ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஐதராபாத்தின் அருகிலுள்ள யூசுஃப்குடாவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் அந்தப் பேராசிரியர் புஷ்பா 2 பற்றிய விமர்சனத்தை தனது வீடியோவின் மூலம் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் பேசியதாவது : "ஸ்கூல்ல பசங்க நடந்துக்குறத பாத்தா, ஸ்கூல் அதிகாரிங்கிற முறையில நான் தோத்துட்டேன்னு தோணுது. பசங்க கண்ட ஹேர்ஸ்டைல்ல வர்றாங்க, அசிங்கமா பேசுறாங்க. நாங்க படிப்ப மட்டும் பாக்குறோம், இத கவனிக்கல. கவர்மெண்ட் ஸ்கூல்ல மட்டும் இல்ல, பிரைவேட் ஸ்கூல்லயும் இதுதான் நிலைமை.

ஒரு அட்மினிஸ்ட்ரேட்டரா நான் தோத்துட்டேன்னு எனக்கு தோணுது. ஒரு டீச்சரா பசங்கள 'தண்டிக்க' எனக்கு தோணல. ஏன்னா அது அவங்கள பிரஷர்ல ஆக்கும். பசங்க இப்படி நடந்துக்குறதுக்கு சோஷியல் மீடியாவும் சினிமாவும்தான் காரணம்னு அந்த டீச்சர் கூறி இருக்கிறார். 

மேலும், "இந்த பிரச்சனையைப் பற்றி நான் பெற்றோரிடம் உரையாடியபோது, அவர்களும் கவனிக்கவில்லை. எங்களுக்காக மாணவர்களை தண்டிக்க முடியாது, ஏனெனில் அது அவர்களை மேலும் அழிவுக்கு அழைத்துச் செல்லும்" என்று அவர் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

"நான் கூறுவது, புஷ்பா படத்துக்கு சென்சார் சான்றிதழ் அளித்தவர்கள் தவறு செய்துவிட்டார்கள். பள்ளிகளில் பாதி மாணவர்கள் அந்த படத்தைக் கொண்டே கெட்டுப் போயிருக்கிறார்கள். இது எப்படி சான்றிதழ் பெற்றது என்று தெரியவில்லை" என்று அந்த ஆசிரியர் கேள்வி எழுப்பினார்.

இந்த வீடியோ வைரலாக பரவியபோது, சமூக வலைதளங்களில் பலவகையான கருத்துக்கள் எடுக்கப்பட்டுள்ளன. சிலர், படத்திற்கு சென்சார் வழங்குவது தவறு என கண்டிப்பாக விமர்சித்துள்ளார்கள், மற்றவர்கள் பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களை கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், சமூக ஊடகங்களில் இந்த விவாதம் ஒரு பெரும் விவகாரமாக மாறி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com