வலிமை : முதல் நாள் காட்சியை பார்க்க வரமாட்டேன்...சொன்னத செஞ்சுட்டாரே இந்த எச்.வினோத்!!

வலிமை : முதல் நாள் காட்சியை பார்க்க வரமாட்டேன்...சொன்னத செஞ்சுட்டாரே இந்த எச்.வினோத்!!
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தின் ரீலிஸ் தேதி தள்ளி தள்ளி போனதால் அஜித்தின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்நிலையில்  ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது வலிமை திரைப்படம்.

இந்த படம் வெளியான எல்லா திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அஜித்தின் ரசிகர்கள் அதிகாலை காட்சியை பார்ப்பதற்காக குடும்பம், குடும்பமாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வந்ததை பார்க்க முடிந்தது. படத்தில் வரும் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளையும் பார்த்து ரசிகர்கள் கரகோஷமிட்டு கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஹூமா குரேஷி, கார்த்திகேயா ஆகியோர் சென்னயைில் இருக்கும் ரோஹினி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தார்கள். ஆனால் இயக்குநர் எச்.வினோத்தை காணவில்லை.

அட என்னடான்னு பார்த்தா...வலிமை படத்தை நான் ஏற்கனவே பல முறை பார்த்துவிட்டேன். அதனால் முதல் நாள் முதல் காட்சியை நான் பார்க்க மாட்டேன் என்று எச்.வினோத் தெரிவித்திருந்தார். ஏதோ சும்மா சொல்கிறார் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் தற்போது  நிஜகமாவே அவர் வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு வரவில்லை. சொன்னத அப்படியே செஞ்சுட்டாரு பா...இயக்குனர் வினோத்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com