சில இயக்குனர்கள் அது போன்ற காட்சிகளை எடுக்காமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.... விக்னேஷ் சிவன்!!!

சில இயக்குனர்கள் அது போன்ற காட்சிகளை எடுக்காமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.... விக்னேஷ் சிவன்!!!

நான் இதுவரையும் என்னுடைய படங்களில் குடிப்பது, தம் அடிப்பது போலவும் படம் எடுத்ததில்லை இயக்குநர் விக்னேஷ் சிவன் பேட்டியளித்துள்ளார்.

ஆவணத் திரைப்படம் போட்டி:

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவணத் திரைப்பட போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பரிசு:

இந்த போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆவணத் திரைப்படம் போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில் அதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், 

ஒரு தொடக்கமாக:

திரைத்துறையில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த குறும்பட போட்டி என்பது ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது எனவும் இது போன்ற விசயங்களை படமாக எடுக்க முடியாது என்பதாலேயே குறும்படமாக எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் சினிமாவில் போதை பழக்கம் காட்சிகள் இல்லாமல் காண்பிப்பது நல்லது தான் இது குறித்து காவல்துறை கூட அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுவரை..:

தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன் போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகள் படங்களில் வரும் பொழுது கீழேயே விழிப்புணர்வு ஏற்படுத்த கார்டு போடப்படுகிறது எனவும் தற்பொழுது அது போன்ற காட்சிகள் சினிமாவில் குறைந்துள்ளது எனவும் போகப் போக அதை குறைத்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும், சில இயக்குனர்கள் அது போன்ற காட்சிகளை எடுக்காமல் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் பேசியுள்ளார்.

விழிப்புணர்வு:

அதனைத் தொடர்ந்து நான் இதுவரையும் என்னுடைய படங்களில் குடிப்பது, தம் அடிப்பது போலவும் படம் எடுத்ததில்லை எனவும் அது போன்ற காட்சிகள் படங்களில் வைக்கும் பொழுது படம் தொடங்குவதற்கு முன்னதாகவே அது குறித்து விழிப்புணர்வு காடு போடப்படும் எனவும் கூறிய அவர் ஆனால் என் படங்களில் அது போன்ற கார்டு போடப்பட்டது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.  

நானும் ரவுடிதான்:

மேலும் நானும் ரவுடிதான் படம் பாண்டிச்சேரியில் எடுத்தேன் எனவும் அந்தப் படத்தில் கூட குடிப்பது போன்ற காட்சிகள் எதுவும் வைக்கவில்லை எனவும் தெரிவித்த அவர் என்னால் முடிந்தவரை என்னுடைய நண்பர்கள், என் படத்தில் வரும் ஹீரோக்களை குடிக்க விடாமல் நானும் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com