
தமிழகத்தை தனது இசையால் கடந்த ஐம்பது வருடங்களாக கட்டிப்போட்டு வைத்திருக்கும் இளையராஜாவை பாராட்டி தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கும் “பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் “முதலமைச்சருக்கு பெயர் சூட்டியவர் தான் எனது அண்ணன் இளையராஜாவிற்கும் எனக்கும் பெயர் சூட்டினார் இளையராஜா அவர்களுடன் நான் கடந்து வந்த 50 ஆண்டுகளை ஒவ்வொரு வாக்கியமாக சொன்னால் இந்த விழா நேரம் போதாது அதனால் அவருக்காக சில வரிகளை நான் எழுதி கொண்டு வந்திருக்கிறேன்” என கூறி இளையராஜாவிற்காக எழுதி கொண்டு வந்த பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளார்.
கமல்ஹாசன் பாடிய வரிகள் “உன்னை ஈன்ற உலகிற்கொரு நன்றி.. நமை சேர்த்த இயலுக்கும் நன்றி.. மாறாத ரசிகன் சொல்லும் நன்றி.. மனங் கொண்ட உறவு சொல்லும் நன்றி.. உயிரே வாழ்.. இசையே வாழ்.. தமிழே வாழ்..” என பாடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் சுருதி சேரவில்லை என்றால் தன்னை மன்னித்து கொள்ளுங்கள் என கூறினார் கமல்ஹாசன்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.