” நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி,... ஆனால் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் ” - நடிகர் பிரபு.

” நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி,... ஆனால்  சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் ” - நடிகர் பிரபு.
Published on: 
Updated on: 
1 min read

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் என்றும், தற்போது உள்ள நடிகர்கள் சூப்பர் ஆக்டர்கள் எனவும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட கல்யாண் ஜூவல்லர்ஸ் திறப்பு விழாவில் நடிகர் பிரபு மற்றும் நடிகை ரெஜினா ஆகியோர் கலந்து கொண்டு ஷோருமை திறந்து வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபுவிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ” நடிகர விஜய் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி அதை நான் வரவேற்கிறேன்; இளம் இரத்தம் அரசியலுக்கு வருவது நல்லது ”, என்றார்.

மேலும் தொடர்ந்து நாளை பிறந்தநாள் கொண்டாடும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தொலைபேசி மூலம் பிரபு வாழ்த்து தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com