பிறந்தநாளில் திருமண தேதியை அறிவிக்கப்போகிறாரா சிம்பு...? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

பிறந்தநாளில் திருமண தேதியை அறிவிக்கப்போகிறாரா சிம்பு...? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், வருகின்ற பிப்ரவரி 3 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

அன்றையதினம் சிம்பு நடித்துவரும்  ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் அப்டேட் மற்றும் அவர் அடுத்ததாக நடிக்க உள்ள ’பத்து தல’ என்ற திரைப்படத்தின் அப்டேட் ஆகியவை பிப்ரவரி 3 ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிம்பு தனது பிறந்த நாளான்று தன்னுடைய திருமண நாளையும் சேர்த்து அறிவிக்க இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.

’ஈஸ்வரன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை நிதிஅகர்வாலை சிம்பு காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் ஏற்கனவே, வதந்திகள் இணையதளங்களில் உலாவி வருகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் சிம்பு தனது பிறந்தநாளின் போது நிதி அகர்வாலை திருமணம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது நாளை மறுநாள் தான் தெரியவரும். 

ஆனால், இவர்கள் இருவரையும் பற்றி அரசல் புரசலாக தகவல் வெளியானபோதே, இது குறித்து கருத்துக்கூறிய நிதி அகர்வால் ’சில வதந்திகள் உண்மையாக இருக்கலாம், சில பொய்யாகவும் இருக்கலாம். உண்மை என்ன என்பது நமது பெற்றோருக்கு மட்டும் தெரிந்தால் போதும், வதந்திகளை பற்றி கவலைப்பட தேவையில்லை’ என்று பதில் அளித்து இருந்தார்.

இதனைத்தொடர்ந்து தற்போது சிம்பு தனது பிறந்தநாளின் போது திருமண தேதியையும் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருவது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com