என்னது சமந்தாவின் பச்சை காஸ்ட்யூமின் விலை இத்தனை லட்சமா? மிரண்டு போன ரசிகர்கள்!

என்னது சமந்தாவின் பச்சை காஸ்ட்யூமின் விலை இத்தனை லட்சமா? மிரண்டு போன ரசிகர்கள்!
Published on
Updated on
1 min read

நடிகை சமந்தாவின் கருப்பு மற்றும் பச்சை காஸ்டியூம் அணிந்த   புகைப்படங்கள் நேற்று வெளியானதையடுத்து, மிகப்பெரிய அளவில் வைரலானது. தற்போது இந்த காஸ்ட்யூமின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் க்ரிட்டிக் சாய்ஸ் பிலிம் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரை விட அவருடைய பச்சை நிற கிளாமர் காஸ்ட்யூம் தான் இணையதளம் முழுவதும் பேசும் பொருளானது.

மேலும் இவர் அணிந்து வந்த  பச்சை மற்றும் கருப்பு நிற இந்த காஸ்டியூம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாகவும், இதில் சமந்தா கூடுதல் அழகாக இருப்பதாகவும் பலர் அவரை வர்ணித்து வந்தனர். இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், இணையத்தையே சூடேற்றி வந்தது. 

இந்நிலையில் நடிகை சமந்தா அணிந்திருந்த இந்த பச்சை மற்றும் கருப்பு உடையின் விலை 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் நெட்டிசன்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com