தனுஷ் - வடிவேலு பிரச்சனை தீர்ந்துவிட்டதா? சிவகங்கையில் ரசிகர்களுக்கு ஷாக் - 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி!

‘படிக்காதவன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதை நீண்ட காலம் தவிர்த்து வந்த நிலையில், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
Dhanush-Vadivelu in D56 pooja
தனுஷ் - வடிவேலு பிரச்சனை தீர்ந்துவிட்டதா? சிவகங்கையில் ரசிகர்களுக்கு ஷாக் - 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி!AI Enhanced
Published on: 
Updated on: 
1 min read

நடிகர் தனுஷின் 56வது படத்தின் பூஜை சிவகங்கை மாவட்டம், மரநாடு கருப்பண்ணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இந்தப் படத்தில் பிரீத்தி முகுந்தன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் முதல்முறையாக தனுஷ் - வடிவேலு இணைந்து நடித்துள்ளனர்.

வடிவேலு சொன்னது என்ன?

இதுகுறித்து வடிவேலு பேசும்போது, "எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சினிமாவில் சில வில்லங்கமான ஆட்கள் போகிற போக்கில் பொருத்தி (கொளுத்தி) போடுவார்கள். அப்படி சிலர் இரண்டு பேரைப் பிரிக்க தீப்பந்தமாகக் கொளுத்திப் போட்டுவிட்டார்கள்.

மரநாடு கருப்பண்ணசாமி கோவில் மிகவும் விசேஷமானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வழியாக, இந்தப் புனிதத் தளத்தில் நிற்கக்கூடிய இந்தப் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இந்தப் படம் எந்த அரசியல் சார்பும் இல்லாத வித்தியாசமான படம். இந்தக் கதையைக் கேட்டு மிகவும் பெருமைப்பட்டேன், ஆச்சரியப்பட்டேன். இது மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகும்" எனப் பேசினார்.

Padikathavan Movie Shooting
Padikathavan Movie Shooting

படிக்காதவன் ஃபிளாஷ்பேக்

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களாக இருந்தாலும், தனுஷ் - வடிவேலு காம்பினேஷன் அமையாததற்கு ஒரு ஃபிளாஷ்பேக் உள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால், முதல் நாளே படப்பிடிப்பில் நடந்த சில சம்பவங்களால் இருவருக்கும் இடையே ஈகோ பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வடிவேலு படத்தில் இருந்து விலகியிருக்கிறார்.

வடிவேலுவுக்குப் பதிலாக விவேக் அந்தப் பாத்திரத்தில் நடித்தார். படம் வெளியான பிறகு, நகைச்சுவைக் காட்சிகள் சிறப்பாக இருப்பதாக வடிவேலு பாராட்டியதாக, இயக்குநர் சுராஜ் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

‘படிக்காதவன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதை நீண்ட காலம் தவிர்த்து வந்த நிலையில், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

Dhanush-Vadivelu in D56 pooja
மாரநாடு கருப்பணசாமி கோயிலில் தனுஷ் செய்த "சம்பவம்".. இதனால் தான் அரசியலில் ஒரு கை பார்த்துடலாம்-னு நினைக்கிறாரோ!?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com