

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவின் குழந்தையின் தந்தை யார்? என்பதைத் தீர்மானிப்பதற்காக, பிரபல சமையல் கலைஞர் மதம்பட்டி ரங்கராஜுக்கு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள், நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்களன்று தெரிவிக்கப்பட்டது.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமயல் கலைஞர் மற்றும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மகளில் ஆணையரகத்தில் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பினரும் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர். வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருந்த நிலையில் ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. மேலும், ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதற்கு ஆதாரமாக தனது சமூகவலைதளப்பாக்கத்தில் பல வீடியோக்களை பதிவேற்றி கொண்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது ஜாய் கிரிசில்டா, தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே போல் மாதம்பட்டி ரங்கராஜும் இந்த மரபணு சோதனைக்கு தான் தயாராக இருப்பதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரது தரப்பிலும் மரபணு சோதனைக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவை பெற்றுக் கொண்ட நீதிமன்றம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. மேலும் அந்த அறிக்கையை மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட நீதிபதியிடம் சமர்பிக்க ஒரு வழக்கறிஞர் ஆணையரையும் உருவாக்கியது.
நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிஎன்ஏ பரிசோதனை முடிந்து, அதன் முடிவுகள் மத்தியஸ்தர் பி.என். பிரகாஷிடம் முத்திரையிடப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக அரசு வழக்கறிஞர் ஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், தங்களுக்கு இடையேயான மத்தியஸ்த நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது என கூறியிருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.