பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா உயிரிழப்பு !!!பிறப்பு முதல் இறப்பு வரை...

பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா உயிரிழப்பு !!!பிறப்பு முதல் இறப்பு வரை...
Published on
Updated on
2 min read

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரும் மூத்த நடிகருமான கிருஷ்ணா இன்று அதிகாலை 4 மணி அளவில் ஹைதராபாத்தில் உயிர் இழந்தார்.தெலுங்கு சினிமா ரசிகர்கள் மிகவும் அதிரிச்சியில் மூழ்கி உள்ளனர்.

யார் இந்த சூப்பர் ஸ்டார் :
 


தமிழில் சூப்பர் ஸ்டார் யார் என்று எல்லோருக்கும் தெரிந்ததே.அதேபோல் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் தான்  கிருஷ்ணா.இவரது முழு  பெயர் கட்டமனேனி சிவராம கிருஷ்ண மூர்த்தி.இவர் 1943ல் புள்ளெரி பாலம் என்ற சிறு கிராமத்தில் பிறந்து எல்லோருக்கும் சவால் கொடுக்கும்  நடிகராக வாழ்ந்துள்ளார்.இவருக்கு வயது 79. நம்ம தமிழ் சூப்பர் ஸ்டார் போலவே இவரும் எளிமையானவர்.இவர் 1989ல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெரிந்த கொள்ள:https://malaimurasu.com/Thalapathy-Vijay-Film-To-Not-Release-During-pongal
 
தந்தையை மிஞ்சும் மகன்:

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கிருஷ்ணா தெலுங்கில் நடித்த அல்லூரி சீதாராமராஜு என்ற திரைப்படம் மிகவும் அவருக்கு பெருமை சேர்த்தது.அவர் கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக தெலுங்கு,தமிழ் போன்ற மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தவர்.அவருக்கு இணையாக அவரது மகன் மகேஷ் பாபு அவரை மிஞ்சும்  வகையில் தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் அவருக்கென தனி இடம் பிடித்து வருகிறார்.இப்பொது அவரது மகளான சித்தாராவும் திரை உலகில் அடி எடுத்து வைக்கிறார்.

கிருஷ்ணாவின் இறப்பு !! ரசிகர்கள் சோகம் !!:

 நடிகர் கிருஷ்ணாவிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால்  ஹைதராபாத்தில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு சி பி ஆர் டிரீட்மென்ட் அளிக்கப்பட்ட நிலையில் முயற்சி வீணாகி அவர் உடல்நிலை ஒத்துழைக்காமல்  இன்று அதிகாலை 4மணி அளவில் உயிர் இழந்தார்.இதனால் அவரது குடும்பம் மற்றும் அவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.திரை பிரபல நடிகர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

---ஸ்வாதிஸ்ரீ

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com