

சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை திரிஷா தற்போது காதல் பற்றி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
நடிகை திரிஷா கிருஷ்ணன், பல வணிகரீதியாக வெற்றி பெற்ற தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களைக் கொடுத்து, 22 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். தற்போது 42 வயதாகும் இவர், சினிமா வட்டாரத்தில் மிகவும் பரபரப்பான நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார். உதாரணமாக, அவரது சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவை தொடர்ந்து பரபரப்பு செய்திகளை தந்துகொண்டே இருக்கின்றன.
விஜய் - திரிஷா இருவரும் 'கில்லி', 'ஆதி', 'லியோ' போன்ற திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றி உள்ளனர். மேலும், 'கோட்' திரைப்படத்தில் வந்த ஒரு சிறு பாடலுக்கும் விஜயுடன் இணைந்து நடனமாடியுள்ளது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடிகரும், தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் 'ஒரு நடிகை' என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நடிகை திரிஷாவாக இருக்கலாம் என்று பலராலும் கூறப்பட்டது. இதனையடுத்து, விஜய் மற்றும் திரிஷா இருவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது, மேலும் பேசுபொருளானது. பின்னர் இது சம்பந்தமாக பல விமர்சனங்கள் திரிஷாவை நோக்கி எழுந்தன. மேலும், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் அமைதியாக சென்றுவிட்டார். இதனையடுத்து, திரிஷா தற்போது காதல் குறித்து ஒரு ஸ்டோரி பதிவேற்றியுள்ளார். இதுதான் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுமட்டுமின்றி, மற்றவர்களுக்கு தன்னை பற்றி விளக்குவதை விட அமைதியாக இருப்பதே சிறந்தது என்று ஒரு பெண் பேசுவது போன்ற ஒரு காணொளியையும் பதிவேற்றியிருந்தார். அதனை தொடர்ந்து காதல் குறித்த ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதில், "காதல் மட்டுமே எல்லாம் அல்ல, ஆனாலும் காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது" என்று மற்றொரு பதிவைப் பகிர்ந்தார். அந்த பதிவில் மேற்கோளிட்டு காட்டிய திரிஷா 'உண்மை' என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது இந்த பதிவு ரசிகர்களிடையே மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த பதிவை யாரை குறிப்பிட்டு திரிஷா போட்டுள்ளார் என்று பல கேள்விகளோடு இணையவாசிகள் வலம்வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.