’அஜித் 62’ படத்தின் கதை இதுதானா? வெளியான தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நடிகர் அஜித் தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள் திறந்து அதை நிர்வாகம் செய்யும் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
’அஜித் 62’ படத்தின் கதை இதுதானா? வெளியான தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Published on
Updated on
1 min read

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்த கதை கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் ‘அஜித் 61’ திரைப்படத்தில் இரட்டை வேடம் பூட்டியிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதாவது ஒரு கேரக்டர் வங்கியை கொள்ளை அடிக்கும் கொள்ளையர் என்றும், இன்னொரு கேரக்டர் காவல்துறை அதிகாரி என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ‘அஜித் 62’ திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். அதற்கு முதற்கட்ட வேலையான படத்தின் கதையை அவர் தற்போது எழுதி முடித்துவிட்டதாகவும், திரைக்கதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ‘அஜித் 62’ படத்தின் கதை குறித்த தகவல் கசிந்துள்ளது.

வெளியான இந்த தகவலின்படி, ‘அஜித் 62’ திரைப்படத்தில் தமிழகம் முழுவதும் உணவு நிறுவனங்களை நிறுவி அதனை நடத்தும் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவிருப்பதாகவும், இந்த கேரக்டர் ஒரு சவாலான கேரக்டர் என்றும், ஒரு சாதரணமான குடிமகனாக இருந்து தனது கடுமையான உழைப்பாலும், திறமையாலும் படிப்படியாக உயர்ந்து எப்படி உச்சத்திற்கு செல்கிறார் என்பது தான் கேரக்டர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் அஜித் இளமையான தோற்றத்தில் இருப்பார் என்றும் தகவல் வெளியானதால் ‘அஜித் 62’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com