ஜாவான் திரைப்படம் வெளியீடு; ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஜாவான் திரைப்படம் வெளியீடு; ரசிகர்கள் கொண்டாட்டம்!
Published on
Updated on
1 min read

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என இதுவரை அட்லீ இயக்கிய 4 தமிழ் படங்களும் மெகா ஹிட் அடித்த நிலையில், முதன்முறையாக ஷாருக்கானை வைத்து அவர் இயக்கி உள்ள ஜவான் படத்திற்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்தன.

இந்நிலையில், இன்று, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்  உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தைக் காண, ஷாருக்கான் ரசிகர்கள், விஜய் சேதுபதி ரசிகர்கள் உள்ளிட்டோர் திரையரங்கை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோஹினி திரையரங்கில், ஜவான் திரைப்படம்  முதல் காட்சி  காலை 9 மணிக்கு  திரையிடப்பட்டது. இந்த காட்சியை இயக்குநர் அட்லி, இசையமைப்பாளர் அனிருத் இருவரும் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தை பார்த்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள திரையரங்கு முன் வைக்கப்பட்டுள்ள ஷாருக்கான் கட் அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும் தேங்காய் உடைத்தும் பட்டாசுகள் வெடித்தும் படத்தை கொண்டாடினர். மும்பையில் உள்ள கெயிட்டி திரையரங்கில் ஜவான் திரைப்படத்தைக் காண  ஷாருக்கான் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

“I don’t release films on festivals, My film’s release is a festival ”
~Shah Rukh Khan

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com