ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்: ஆஸ்காருக்கு அடுத்த விருதுக்கு தகுதி பெற்று அசத்தல்...

ஜெய் பீம் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு தகுதி பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்: ஆஸ்காருக்கு அடுத்த விருதுக்கு தகுதி பெற்று அசத்தல்...
Published on
Updated on
2 min read

ஜெய் பீம் திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில்  நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றது.

ஜெய் பீம் திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்  தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார்.  பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. 

ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், நல்லகண்ணு, சத்யராஜ், சீமான், பாரதிராஜா உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் சில சர்ச்சைகளையும் கிளப்பியது, படத்தின் காலண்டர் சர்ச்சை குறித்து பாமக கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.இதற்கு சூர்யாவும் பதில் அளித்திருந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது. சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். 

இந்நிலையில் ஜெய்பீம் படம் கோல்டன் குளோப் விருதுக்கு  சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்பட த்துக்கான பிரிவில் ஜெய்பீம் திரைப்படமும் இந்தியா சார்பாக இடம் பெற்றுள்ளது. கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2022 ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com