ரஜினியின் ஜெயிலர் 2.. 'அலா பொலேலோ' பாடல் வெளியீடு! 'காவலையா’ போல் ஹிட் ஆகுமா?

மலையாள சாயலை கொண்ட இந்தப் பாடல், ஓணம் பண்டிகையை முன்னிட்டு
jailer 2 song
Published on
Updated on
1 min read

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ள படமாகும். உலகளவில் 650 கோடி ரூபாய் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ முதல் பாகத்தைப் போலவே, 'ஜெயிலர் 2' படத்திலும் ஏராளமான சண்டைக் காட்சிகளும் பொழுதுபோக்கும் இருக்கும் என்பதே  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வலுவான வெற்றியைப் பெற்ற முதல் பாகமான 'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஜெயிலர் 2 படத்தின் பாடல் வெளியாகும் என்ற செய்தி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. நேற்று 'அலா பொலேலோ' பாடலுக்கான சிறு முன்னோட்டங்கள் வெளியிடப்பட்டன. இந்த முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்த துள்ளலான நடனப் பாடல் தற்போது  வெளியாகியுள்ளது.

இந்த 'அலா பொலேலோ' பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷாம்னா காசிம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பூர்ணா என அறியப்பட்ட  ஷாம்னா காசிம் இதற்கு முன் தமிழில் பல படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மலையாள சாயலை கொண்ட இந்தப் பாடல், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள ரசிகர்களுக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இந்த பாடலை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். விசுவலாக வெளியான இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயிலர் இடம் பெற்றிந்த தமன்னா நடத்தில் ஹிட் ஆனா 'காவலயா' பாடலை போலவே இந்த பக்கத்தில் 'அலா பொலேலோ' பாடல் இடம்பெற்றுள்ளது.

பாடலின் முன்னோட்டம் வெளியான போது, சில ரசிகர்கள் பாடலின் வைப் பண்டிகை கால உணர்வை கொடுத்தாலும், மலையாள வார்த்தைகளின் உச்சரிப்பை குறிப்பிட்டு விமர்ச்சித்திருந்தனர். மலையாள  நெட்டிசன்கள் சிலர், பாடல் வரிகளில் மலையாள வார்த்தைகளின் உச்சரிப்பை சரியாக வழங்கப்படவில்லை என்று கருதி, சமூக ஊடகங்களில் தங்கள் கருத்தை பதிவிட்டு வந்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com