ஜெயிலர் 2: US முதல் சிங்கப்பூர் வரை.. ரஜினி ரசிகர்கள் அலப்பறை.. ஆட்டம் போட்ட மகள் சௌந்தர்யா!

ஜப்பானில் முதன்முறையாக இந்தியாவில் வெளியாகும் அதே நாளில் ராஜினிகாந்த் திரைப்படம் வெளியாகிறது.
Jailer 2: From US to Singapore.. Rajini Fans Go Wild & Daughter Soundarya Dances!
ஜெயிலர் 2: US முதல் சிங்கப்பூர் வரை.. ரஜினி ரசிகர்கள் அலப்பறை.. ஆட்டம் போட்ட மகள் சௌந்தர்யா!
Published on: 
Updated on: 
1 min read

ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிரூத் இசையில் உருவாக்கியிருக்கும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் 8:30 மணிக்கும் பிற மாநிலங்களில் 6 மணிக்கும் முதல் காட்சி தொடங்குகிறது. பிற நாடுகளிலும் ரிலீஸ் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேற்று இரவே ரஜினி பாடல்களுக்கு ஆட்டம் போட்டு கொண்டாடத் தொடங்கிவிட்டனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அடுத்தடுத்து 7 காட்சிகளை ரசிகர்கள் புக் செய்துள்ளனர்.

ஜப்பானில் முதன்முறையாக இந்தியாவில் வெளியாகும் அதே நாளில் ராஜினிகாந்த் திரைப்படம் வெளியாகிறது.

அமெரிக்காவிலும் தியேட்டர் வாசலில் DJ உடன் ரஜினிகாந்த் பாடல்களுக்கு நடனமாடி கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

சென்னை காசி திரையரங்கில் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரசிகர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.

சிங்கப்பூர் ரஜினி ரசிகர்களும் திரையரங்கை நிறைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com