ஜெயிலர் 2 ட்ரெயிலரில் சொதப்பிய AI? ரசிகர்கள் அதிருப்தி - 'ரஜினிகாந்த்' விரல்களை கவனிச்சீங்களா?

அக்டோபர் 15-ம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில், டிரெய்லரின் தரம் குறித்து எழுந்த கேள்விகள் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளன.
Jailer 2
Jailer 2: சொதப்பிய AI? ரசிகர்கள் அதிருப்தி - ரஜினிகாந்த் விரல்களை கவனிச்சீங்களா?
Published on: 
Updated on: 
1 min read

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். ரஜினிகாந்த் உடன் வசந்த் ரவி, மிர்னா, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷராஃப் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வந்து மிரட்டியிருந்தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே உருவாகியிருக்கிறது ஜெயிலர் 2.

இந்தப் படத்தின் அறிவிப்பு தொடங்கி, பாடல்கள் வரை ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து ரசித்து வருகின்றனர். ஜெயிலர் 2 குறித்த சிறிய தகவல் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது.

அக்டோபர் 15-ம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில், டிரெய்லரின் தரம் குறித்து எழுந்த கேள்விகள் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளன.

குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் வரும் குண்டுவெடிப்பு ஸ்லோமோஷன் காட்சியில் ரஜினிகாந்தின் விரல்கள் சிறிதாகவும் பெரிதாகவும் மாறுவதையும், ஒரு நொடி 6 விரல்கள் போல காட்சி அளிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

jailer 2
Jailer 2 Trailer

600 கோடிக்கும் மேல் வசூல் செய்த படத்தின் இரண்டாம் பாகத்தில், தரமில்லாத AI காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறித்து இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.

ஒருவர், "ஜெயிலர் - 2 டிரெய்லர் பார்த்தேன். சொதப்பலான ஏ.ஐ காட்சிகள்! குறிப்பாக ரஜினி ஒரு கட்டிடத்தை வெடிக்க வைக்கிற காட்சி. கைவிரல்களை கவனியுங்கள்" என ட்வீட் செய்துள்ளார்.

"இதுபோன்ற தவறுகளைப் படத்தில் சரி செய்திருப்பார்கள் என நம்புவோம்" என சில ரசிகர்கள் கடந்து செல்கின்றனர். சிலர் இது கேமரா கிளிட்ச் ஆக இருக்கலாம் என்கின்றனர்.

முன்னதாக, ஜெயிலர் 2 பாடல்களில் AI பயன்படுத்தப்பட்டிருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நட்சத்திரத்தின் படங்களில் தரமான VFX குழுவைப் பயன்படுத்தாமல் AI-ஐ நம்பியிருப்பது கவலையளிக்கும் டிரெண்டாக உருவாகியிருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com