“தளபதி கச்சேரி” - இன்று நடக்கும் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா… கொண்டாடி தீர்க்க மலேசியாவுக்கு பறந்த தளபதி ரசிகர்கள்!

மலேசியா சென்ற நிலையில் அவருக்கு மலேசியா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
“தளபதி கச்சேரி” - இன்று நடக்கும் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா… கொண்டாடி தீர்க்க மலேசியாவுக்கு பறந்த தளபதி ரசிகர்கள்!
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் அவர் தற்போது தனது சினிமா பயணத்தை முடித்து கொண்டு அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகம் தான் அவர் நடிக்கும் கடைசி என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற அனைத்து படங்களை விட இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. மேலும் விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை மலேசியாவில் நடக்க உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நேற்றே தனி விமானம் மூலம் விஜய் மலேசியா சென்ற நிலையில் அவருக்கு மலேசியா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தான் விஜய் கலந்து கொள்ளும் அவர் திரைப்படத்தின் கடைசி இசை வெளியீட்டு விழா என்பதால் இதனை வெறும் இசை வெளியீட்டு விழாவாக மட்டும் இல்லாமல் “தளபதி கச்சேரி” என்ற பெயரில் கான்செர்ட் ஆகா நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த். மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் ஏற்கனவே மலேசியா சென்று விட்டனர். அது மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் பலரும் மலேசியா பறந்து வருகின்றனர். வழக்கமாக தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரி அவரது ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் நிலையில் இன்று என்ன குட்டி ஸ்டோரி சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தளபதி ரசிகர்கள் “ONE LAST TIME” என கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

மலேசியாவில் நிகழ்ச்சி நடக்க உள்ள கோலாலம்பூர் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் கட்சி கொடி, கட்சி சார்ந்த புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி கான்செர்ட்டாக நடத்தப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர்களான அனுராதா ஸ்ரீராம், சைந்தவி, திப்பு, க்ரிஷ் உள்ளிட்ட பாடகர்கள் இசை வெளியீட்டு விழாவில் பாட மலேசியா புறப்பட்டு சென்றுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com