"3 வயதில் திருமலை பார்த்தேன்" - ஜேசன் பேசும்போது 'TVK, TVK..' என ஆரவாரம்!

"நான் இயக்குநர் ஆவது உறுதியான பிறகு முதன்முதலாக அம்மாவிடம் தான் கால் செய்து சொன்னேன்." என்றார் ஜேசன்.
"3 வயதில் திருமலை பார்த்தேன்" - ஜேசன் பேசும்போது 'TVK, TVK..' என ஆரவாரம்!
"3 வயதில் திருமலை பார்த்தேன்" - ஜேசன் பேசும்போது 'TVK, TVK..' என ஆரவாரம்!
Published on
Updated on
2 min read

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்வு சேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்வில் அவரது என்ட்ரிக்கு மாஸ் வரவேற்பு அளித்தனர் கல்லூரி மாணவர்கள். அவர் மேடையில் ஏறும்போது, ‘டிவிகே... டிவிகே...’ என ஆர்ப்பரித்தனர்.

எதிர்கால இயக்குநர்களுக்கு அட்வைஸ்!

தனது பேச்சில் தயாரிப்பாளர்கள், நண்பர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார் ஜேசன். அவர் பேசியபோது, “நான் என்னுடைய முதல் ஷாட் எடுக்கும்போது ரொம்ப பதட்டமாக இருந்தேன். ஒரு டேக்குக்குப் பிறகு, ‘நாம் பதட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; வேலையில் முழுமையாக இருப்போம்’ என முடிவு செய்தேன். புதிதாக இயக்குநராக வருபவர்களுக்கு நான் இதைத்தான் சொல்வேன். எவ்வளவு நெர்வஸாக இருந்தாலும், ஸ்பாட்டுக்குப் போனதற்குப் பிறகு அதை என்ஜாய் பண்ணி ஒர்க் பண்ண ஆரம்பிக்கணும்” என்றார்.

இயக்குநராக வேண்டும் என்று நினைப்பவர்கள் நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்ணுங்க, மூளையில் இருக்கும் கதைகளை எழுத ஆரம்பிங்க. நிறைய பயிற்சி எடுத்துக்கோங்க. ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது நிறைய பொறுமை தேவை.

நாம நினைச்சபடி எடுக்க ஒரு சீன் பேப்பரோட தயாராக இருக்கலாம். ஆனால் நாம் கட்டுப்பாட்டை மீறி சில தடங்கல்கள் வரும். அதையெல்லாம் தாண்டி நாம் நினைச்சதை எப்படி எடுக்க முடியும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்." என்றார்.

திரையில் தோன்றப்போக்கும் ஜேசன்!
திரையில் தோன்றப்போக்கும் ஜேசன்!

நான் கூல் அண்ட் கம்போஸ்ட்

தனது குணாதீஷியம் பற்றி பேசும்போது, "நான் கூல் அண்ட் கம்போஸ்டாக (நிதானமாக) தான் இருப்பேன். அதைத்தாண்டி ஏதாவது இருந்தாலும் நான் வெளியே காட்டிக்கொள்ள மாட்டேன்.

செட்டில் ஏதாவது ஸ்ட்ரெஸ் இருந்தா கூட நான் அதை வெளியே காட்டிக்கொள்ளக்கூடாதுன்னு நினைப்பேன். ஏன்னா ஒரு இயக்குநருடைய ரெஸ்பான்சிபிலிட்டிலதான் முழு செட்டும் இருக்கிறது. அதனால் நான் எதையும் வெளியே காட்டிக்கொள்ளக்கூடாதுன்னு நினைப்பேன்." என்றார்.

3 வயதில் திருமலை பார்த்தேன்!

அவர் முதன்முதலாக பார்த்த படம் பற்றி பேசுகையில், “நான் முதல் முதல்ல தியேட்டர்ல போய் பார்த்த படம் ‘திருமலை’. அப்போது எனக்கு மூன்று வயது.

என்னை இயக்குநராக வேண்டும் என்று நினைக்க வைத்த படம் ‘சிட்டி ஆஃப் காட்’ (City of God) என்ற ஒரு பிரேசிலியன் திரைப்படம். அதை நான் சின்ன வயதில் பார்த்தேன். அதுதான் என்னை இன்ஸ்பையர் செய்தது.

நான் இயக்கிய முதல் குறும்படம் ‘புல் தி ட்ரிக்கர்’. அதை 2022-ஆம் ஆண்டில் நாங்கள் சூட் (shoot) பண்ணோம்” என அனுபவங்களைப் பகிர்ந்தார்.

திரையில் தோன்றப்போகும் ஜேசன்!

மேலும் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நான் இயக்குநர் ஆவது உறுதியான பிறகு, முதன்முதலாக அம்மாவிடம்தான் கால் செய்து சொன்னேன்” என்றார்.

தன்னுடைய கல்லூரி காலங்கள் பற்றி பேசியவர், “நீங்கள் 60% அட்டெண்டன்ஸ் குறைவு என்கிறீர்கள். என்னுடைய காலேஜ் அட்டெண்டன்ஸ் எல்லாம் 40% தாண்டி இருக்காதுன்னு நினைக்கிறேன். என்னை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் ஒரு தவறான எடுத்துக்காட்டாக என்னைச் சொல்கிறேன்” என கலகலப்பாக பதிலளித்தார்.

அத்துடன், ‘சிக்மா’ படம் முடிந்த பிறகு எண்ட் கார்டில் வரும் பாடலில் அவரும் தோன்றுவதாகக் கூறினார்.

"3 வயதில் திருமலை பார்த்தேன்" - ஜேசன் பேசும்போது 'TVK, TVK..' என ஆரவாரம்!
‘கிளாடியேட்டர்’ ட்ரெய்லருக்கு இப்படியொரு வரவேற்பா? நிரம்பி வழிந்த திரையரங்குகள்.. BookMyShow-வில் டிரெண்டிங்கில் அஜித்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com