“இயக்குநர் பாக்யராஜ் காலமானார்” - மாரடைப்பு காரணமாக சிகிச்சையில் இருந்தவர் இன்று காலை உயிரிழப்பு!

இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அவர் பல வெற்றிப் படங்களில் தனது திறமையை நிரூபித்து வெள்ளி விழா கதாநாயகனாக திகழ்ந்தவர்...
bhagyaraj
bhagyaraj
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவின் பன்முகக் கலைஞர், நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பல அடையாளங்களால் அறியப்பட்ட கே. பாக்யராஜ் இன்று காலை திடீரென காலமானார் என்ற செய்தி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலை உயிரிழந்திருக்கிறார். ஈரோடு மாவட்டத்தை சொந்த உரக்க கொண்ட இவர் மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது பணியை தொடங்கி பின்னர் பல படங்களை இயக்கி நடிகராகவும் திரையுலகில் பணியாற்றியவர்.

நகைச்சுவை, உணர்ச்சி, சமூக கருத்து ஆகியவற்றை ஒருங்கே கலந்து தனித்துவமான திரைக்கதை பாணியை உருவாக்கியவர் பாக்யராஜ். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அவர் பல வெற்றிப் படங்களில் தனது திறமையை நிரூபித்து வெள்ளி விழா கதாநாயகனாக திகழ்ந்தவர். அவரது படங்கள் எளிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததால், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றன. “சின்ன கதையில் பெரிய உணர்வு” என்ற அவரது பாணி தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது.

இவர் கதாநாயகதாநாயகனா அறிமுகமான திரைப்படம் புதிய வார்ப்புகள் ஒரு கிராமிய பின்னணியில் நடக்கும் காதல் மற்றும் சமூக முரண்பாடுகளை நுணுக்கமாக எடுத்துக்காட்டியது. சாதாரண மக்களின் வாழ்க்கை, அவர்களின் ஆசைகள், சமூக கட்டுப்பாடுகள் ஆகியவற்றை எளிமையான ஆனால் ஆழமான திரைக்கதையில் வெளிப்படுத்தியது இந்த படம் பாக்யராஜின் திரைக்கதை அமைப்பு, இயல்பான நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த படம் அவரை ஒரு “புதிய தலைமுறை கதை சொல்லி” என நிலைநிறுத்தியது. அதே போல பாக்யராஜின் அந்த 7 நாட்கள் படம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் ஏழு நாட்களின் உணர்ச்சி போராட்டத்தை மையமாகக் கொண்டது.

குறுகிய காலத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து ஒரு முழுமையான உணர்ச்சி உலகை உருவாக்கிய விதம் இந்த படத்தின் சிறப்பு. காதல், நம்பிக்கை, சந்தேகம், சமூக அழுத்தம் ஆகியவை அனைத்தும் ஒன்றாக கலந்து ரசிகர்களை ஆழமாக பாதித்த படம் இது. குறிப்பாக இந்த படத்தின் திரைக்கதை அமைப்பு மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு பாக்யராஜின் திறமையை வெளிப்படுத்தியது.இந்த இரண்டு படங்களும் பாக்யராஜின் கலை பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தன. எளிய கதைகளில் பெரிய உணர்வுகளை சொல்லும் அவரது பாணி, பின்னாளில் பல இயக்குனர்களுக்கு தூண்டுகோலாக இருந்தது.இன்று கூட இந்த படங்கள் தமிழ் சினிமாவின் “கிளாசிக்” பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com