'கல்கி 2898' முதல்நாள் வசூல்?

பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 AD: இந்தியாவில் மட்டும் 95 கோடி வசூல் சாதனை
'கல்கி 2898' முதல்நாள் வசூல்?

'நடிகையர் திலகம்' புகழ் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கல்கி 2898 AD.

600 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன்,கமல்ஹாசன்,தீபிகா படுகோன்,பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதுதவிர்த்து நட்சத்திர இயக்குநர்கள்,நடிகர்கள் பலர் படத்தில் கேமியோ செய்துள்ளனர்.பான் இந்திய பாணியில் உருவாகியுள்ள கல்கி,நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில்,கல்கி திரைப்படம் ஒரேநாளில் உலகளவில் 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.அதில்,இந்தியாவில் மட்டுமே 95 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com