மறைமுகமாக அழைப்பா? என்னவா இருக்கும்?

மக்கள் நீதி மையத்தில் இணைய விக்ரமனுக்கு கமலஹாசன் அழைப்பு விடுத்துள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
மறைமுகமாக அழைப்பா? என்னவா இருக்கும்?
Published on
Updated on
1 min read

எது குறித்து பேச வந்தாலும், அங்கு தனது அரசியல் கருத்துகளை புரிந்தவாறும், புரியாதவாறும் குழப்பியாவது தெளிவுப்படுத்த விரும்புபவர் தான் உலக நாயகன். இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில், ஒரு சர்ச்சைக்குறிய பேச்சை பேசி பலரது கவனத்தைஉம் ஈர்த்துள்ளார்.

மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் தலைவராக இருக்கும் நடிகர் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட உலக நாயகன் கமலஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருக்கும் நிலையில், அதே நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருக்கும் ‘விடுதலை சிறுத்தைகள்’ கட்சியைச் சேர்ந்த விக்ர்மனை, தனது கட்சிக்கு மறைமுகமாக அழைத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிகழ்ச்சியின் வார இறுதியில் மக்களின் குரலாக வந்து, நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுடன் பேசும் நடிகர் கமல், விக்ரமனிடம் பேசும் போது,

ஒன்றாக வேலை செய்தாலும் எதிரணியில் வேலை செய்தாலும் சமுதாய வேலை செய்ய வேண்டியுள்ளது.

இதற்கு அங்கிருந்த பார்வையாளர்கள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தன்னைச் சுற்றி பல சர்ச்சைகள் வலம் வந்து ஆட்டம் காட்டும் நேரத்தில், ஈந்த புது சர்ச்சை தேவையா என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அந்நிகழ்ச்சியின் ரசிகர்களும் கேள்வி எழுப்பி இணையத்தில் பதிவுகள் இட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com