தளபதி 67-இல் கமலா? அதிரவைக்கும் புதிய அப்டேட்டால் கதிகலங்கி நிற்கும் ரசிகர் கூட்டம்...

லோகேஷ் கனகராஜ்ஜின் தளபதி 67 படத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் கசிந்தது. இதனால் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.
தளபதி 67-இல் கமலா? அதிரவைக்கும் புதிய அப்டேட்டால் கதிகலங்கி நிற்கும் ரசிகர் கூட்டம்...
Published on
Updated on
1 min read

அடுத்தடுத்து படங்கள் குறித்த அப்டேட் கொடுத்து வரும் ஒரே தமிழ் நடிகராக விஜய் மட்டுமே இருக்க, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான “தளபதி 67” படத்திற்கான ஒரு புதிய அப்டேட் வெளியாகி, ரசிகர்களை உற்சாகக் கடலில் நீச்சலடிக்க வைத்துள்ளது.

சமீபத்தில் வெளியாகி இந்தாண்டின் மிகப்பெரும் தமிழ் படமாக பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை உலகளவில் அள்ளிய படம் தான் விக்ரம். கமலஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில், யாரும் எதிர்பாராத விதத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு பக்கா மாஸ் ஆக்‌ஷன் படமாக உருவாகிய விக்ரம் படம், உலகளவில் பெரும் மக்கள் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த படம் விஜய்யுடன் “தளபதி 67” தான் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தளபதி 67 குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என பேசியது தான் அந்த வீடியோ.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வர, தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. என்னவென்றால், லொகேஷ் கனகராஜ்-இன் அடுத்த படத்தில், அதாவது தளபதி 67-இல் உலக நாயகன் கமலஹாசன் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக் அதகவ்லகள் கூறுகின்றன.

இந்த தகவலால் ரசிகர்கள் படு பயங்கரமாக உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, ட்விட்டரில் ஒரு புகைப்படமும் வைரலாகி தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com