எப்படி சார்..இவ்வளவும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க....- விக்ரமை மெச்சிய விக்ரம்!

எப்படி சார்..இவ்வளவும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க....- விக்ரமை மெச்சிய விக்ரம்!

பொன்னியின் செல்வன் படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமலஹாசன் பேசியதை கண்டு மெச்சிய விக்ரம் கருத்துகள் மைக்கில் ஒலித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
Published on

பொன்னியின் செல்வன் பாகம் 1 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்ற நிலையில், மக்களுக்கு சோழர்கள் மீதான அறிவு அதிகரிக்க விருப்பம் உண்டாகியுள்ளது. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் சரித்திரத்தைப் பற்றி ஆராய அனைவருக்கும் ஒரு ஆர்வம் உருவாகி இருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், சோழர்கள் இந்துக்களா என்ற சர்ச்சை பெரிதாகி அரசியல் மயமாக்கப்படுவதை அடுத்து, நடிகர் கமல், படத்தை ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் நடிகர்களுடன் இணைந்து படம் பார்த்து, தனது கருத்துகளை பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமலுடன் நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர்.

அப்போது படம் குறித்து பல கருத்துகளைப் பேசிய கமலை வியந்து ரசித்துக் கொண்டிருந்த போது, “எப்படி சார் உங்களுக்கு மட்டும் இவ்வளவு தெரிகிறது...” என ஆச்சிரியத்தில் பேசியது மைக்கில் கேட்டது.

முன்னணி நடிகர்களில் ஒருவராக பல தசாப்தங்களுக்கு வலம் வரும் நடிகர் விக்ரம், தன்னை ரசிகப்பவர்களே ஏராளமானோர் இருக்க, உலக நாயகன் மற்றும், விக்ரம் பட நாயகனான கமலை அருகில் இருந்து தன்னடக்கம் மிக்கவராக ரசித்த சிறிய வீடியோ மட்டும், இணையத்தில் படு பயங்கரமாக பகிரப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

அந்த வைரல் வீடியோவின் முழு பகுதியைப் பார்த்து மகிழுங்கள்....

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com