இளமை மாறாத ராஜா தான் இளையராஜா...இசைஞானியை பாராட்டி தள்ளிய கமல்! 

மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year என நடிகர் கமலஹாசன் இளையராஜவிற்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இளமை மாறாத ராஜா தான் இளையராஜா...இசைஞானியை பாராட்டி தள்ளிய கமல்! 
Published on
Updated on
1 min read

மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year என நடிகர் கமலஹாசன் இளையராஜவிற்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இளையராஜா இன்று, அவர் இசையமைத்த இளமை இதோ இதோ என்ற பாடலை பாடி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த பாடல் இணைய தளவாசிகள் மத்தியில் மிகவும் வைரல் ஆனது.

இசை சாம்ராஜ்யத்தில் இளையராஜாவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.காதல்,சோகம்,அன்பு,வேதனை துக்கம்,துயரம் கவலை என்று எந்த மனநிலையில் இருந்தாலும் இளையராஜாவின் பாடல்கள் நம்மை சாந்தப்படுத்தும்.தன்னுடைய எழுபத்தி எட்டு வகைப்படும் ஓயாது உழைத்து வருகிறார். அவர் இசையமைத்த இளமை இதோ இதோ என்ற பாடலை பாடி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு ,இறுதியாக இது எப்படி இருக்கு ரஜனியின் பஞ்ச் டயலாக் பேசியிருப்பார். 

இது குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன்.இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year என்று தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com