இளையராஜாவை விமர்சித்து காட்சி அமைந்ததற்கு வருத்தம் தெரிவித்ததாக கருப்பு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு. இதில் இளையராஜாவை களங்கப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், இளையராஜாவின் பெயரை பயன்படுத்தி வரும் காட்சி செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்டது என்றும், இளையராஜாவை காயப்படுத்தும் நோக்கமோ அல்லது களங்கப்படுத்தும் நோக்கமோ இல்லை என்றும் ட்ரீம் வாரியார்ஸ் நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த வாரம் RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா மற்றும் திரைபட்டாளங்கள் நடித்த கருப்பு திரைப்படம் வெளியானது. தற்போது திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு கொண்டிருக்கும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், இளையராஜா, தனது பாடலை பயன்படுத்தியதாக காப்புரிமை கேட்பது போலவும் அதனால் அத்திரைப்படம் திரையிடப்படக்கூடாது என்பது போலவும் ஒரு நகைச்சுவை காட்சி இடம்போற்றியிருந்தது. இது திரையில் பார்ப்பதற்கு நகைச்சுவைக்குரிய காட்சியாக இருந்தாலும், இளையராஜா மற்றும் அவரின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே, கருப்பு திரைப்படம் வெளியாவதில் நீண்ட சிக்கல் இருந்து வந்தது. அதனையடுத்து, பல தடைகளை தாண்டி திரைப்படம் திரைக்கு வந்தது. இந்நிலையில், திரைப்படம் வெளியான பின்பும் இது போன்ற விமர்சனங்களை சந்தித்து வருவது, சற்றே மனவருத்தத்தை தருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இளையராஜா குறித்த காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தங்களது தரப்பில் வருத்தத்தை தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த தயாரிப்பு நிறுவனம், பண பிரச்சனையிலும், கருப்பு திரைப்படம் வெளியாவதில் நீடித்த பிரச்சனைகளிலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 'இசை ஞானி' இளையராஜாவை நாங்கள் காயப்படுத்தவில்லை என்றும், அவர்கள் தெளிவுற தங்களது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர். உலகளவில் தலைமுறைகளைத் தாண்டிய அவரது இசைக்கு, மரியாதைக்குரிய பாராட்டுக்கள் என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இளையராஜாவை இழிவு படுத்தும் நோக்கில் அந்த காட்சியை காட்சிப்படுத்தவில்லை என்று கூறியும், அது ஒரு பரந்த நகைச்சுவைக்காக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டதாகவும் அவரை தனிப்பட்ட முறையில் கூறப்பட்டது அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், "எதிர்கால பதிப்புகளில் இது போன்ற காட்சிகள் இடம் பெறாது என்றும் அவற்றை நீக்க முடிவு செய்துள்ளோம்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதனால் அடுத்தடுத்த வெளியாகும் 'OTT' போன்ற தளங்களில் இந்த காட்சி இடம்பெறாது என்றும் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.