"என் புருஷன் எனக்கு வேணும்" - ஷூட்டிங் ஸ்பாட்லேயே வச்சு செய்த "கயல்" சீரியல் நடிகரின் மனைவி.. இவ்ளோ நடந்திருக்கா!

கயல் சீரியலால் தனது வாழ்க்கையே சீரழிந்து விட்டதாக, குற்றச்சாட்டு
kayal serial actor ayyapan wife compliant news
kayal serial actor ayyapan wife compliant news
Published on
Updated on
1 min read

கயல் சீரியல் நடிகர் ஐயப்பனின், மனைவி சூட்டிங் நடைபெறும், இடத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு. கனா காணும் காலங்கள் உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர்,நடிகர் ஐயப்பன் உன்னி. இவர் தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலுக்கு அண்ணனாக நடித்து வருகிறார்.

கயல் சீரியலால் தனது வாழ்க்கையே சீரழிந்து விட்டதாக, குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார், ஐயப்பனின் மனைவி பிந்தியா, "கடந்த மூன்று ஆண்டுகளாக பிள்ளையை பார்த்துக்கொள்ள முடியது எனவும் சைக்கோ போல நடந்து கொள்வதாகவும்" ஐயப்பனுக்கு எதிராக, ஒரு மாதத்திற்கு முன்பு மதுரவாயல் காவல் நிலையத்திற்கு உள்ளே உள்ள விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

கணவர் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு, வீட்டில் வந்து சண்டை போடுவதாகவும் தகாத வார்த்தைகளை பேசுவதாகவும்,சில சமயம் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாகவும் பிந்தியா கூறுகிறார்.

இன்று கயல் சூட்டிங் நடைபெறும், இடத்தில் பேட்டி கொடுத்த போது,தனது மகளுக்கும் தனக்கும் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு மீண்டும் தங்களது கணவர் வேண்டும் எனவும் கோரிக்கை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com