புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்.. உறுதிப்படுத்திய பிரபல இசையமைப்பாளர்

புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்.. உறுதிப்படுத்திய பிரபல இசையமைப்பாளர்
Published on
Updated on
1 min read

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சர்காரு வாரி பாட்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் பாடல் ஒன்றை பாடியிருப்பதாக சில தகவல்கள் உலா வந்துகொண்டிருந்தது. 

அது குறித்த தொடர் கேள்வியை இசையமைப்பாளர் எஸ்.தமனிடம் தொடர்ந்து நெட்டிசன்கள் முன்வைக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அதனை மறுக்காத எஸ்.தமன் 'அவர் நிச்சயமாக வயலின் வாசிக்கிறார் ' என சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் இசையின் மீது ஆர்வம் கொண்டவர். அதனை வெளிப்படுத்தும் விதமாக அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கங்களில் வயலின் வாசிப்பது, கிட்டார் வாசிப்பது, பாடல்கள் பாடுவது உள்ளிட்ட வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் சர்காரு வாரி பாட்டா படத்திலும் அவர் வயலின் வாசிக்கவுள்ளார் என்ற செய்தி அவர் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 

She will play the violin for sure
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com