
ராக்கிங் ஸ்டார் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் மற்றும் ரவீனா டாண்டன் நடித்துள்ள "கேஜிஎஃப் சாப்டர் 2" ஏப்ரல் 14 அன்று திரைக்கு வருகிறது. விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப் சாப்டர் 2 இன் டிரெய்லர் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் வைத்து பிரமாண்ட முறையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, பீஸ்ட் படம் குறித்து எழுந்த கேள்விக்கு யாஷ் முற்று புள்ளி வைத்தார். கேஜிஎஃப் 2 மற்றும் பீஸ்ட் ஆகியவை ஒன்றுக்கொன்று பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தை அவர் நிராகரித்தார்.
இது KGF vs Beast அல்ல. இது KGF & Beast... தேர்தலில் ஒருவர் மட்டும் தான் வெல்ல முடியும்.. மற்றவர் தோற்க வேண்டும்.. இது தேர்தல் அல்ல.. இது சினமா.. மேலும் எனது படத்தையும் அவரது படத்தையும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என தெரிவித்தார்.
பின்னர் விஜய் பற்றி பேசிய அவர், விஜய் ஒரு மிக பெரிய நடிகர்.. நாம் அவரை மதிக்கவேண்டும். விஜய் தனக்கு சீனியர் நடிகர் எனவும்.. நான் அவரை பெரிதும் மதிப்பதாகவும் தெரிவித்தார். KGF vs Beast என்று நினைப்பது சரியல்ல எனவும் கூறினார். விஜய்யின் பீஸ்ட் படத்தை திரையரங்கில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் என்று கூறிய அவர், KGF-2 படத்தை விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக விரும்புவார்கள் என்றும் கூறினார்.
யாஷின் பொறுப்பான பேச்சு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சீனியர் நடிகர் விஜய்க்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் யாஷ் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.