தனது மகளை நினைத்து பெருமைப்படும் குஷ்பு.. வைரலாகும் புகைப்படம்

தனது மகளை நினைத்து பெருமைப்படும் குஷ்பு.. வைரலாகும் புகைப்படம்

ஆன்லைனில் பட்டப்படிப்பை முடித்த தனது மகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு நடிகை குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published on

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் குஷ்பு நடித்துள்ளார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை 2000 ஆம் ஆண்டு மணந்தார். தற்போது சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது மகள்களின் படங்களையும் பதிவேற்றி வந்தார். குஷ்பூ- சுந்தர் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் தனது மூத்த மகள் அவந்திகா புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், தனது மகள் பட்டப்படிப்பை முடித்துவிட்டார் என பெருமையாக கூறியுள்ளார்.

படத்தை பதிவிட்டதுடன், என் மகள் பட்டம் பெற்று விட்டாள். அவள் பெரிய பெண்ணாகி நல்ல விதத்தில் பட்டம் பெற்று எங்களை பெருமை படுத்திவிட்டாள். மேலும், நீ ஒரு புதிய உலகில் இனிமேல் அடியெடுத்து வைக்கப்போகிறாய். நீ ஒரு வலிமையான பெண் என்று எங்களுக்குத் தெரியும் என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com