இணையத்தைக் கலக்கும் லேபில் வீடியோ !!  லேபிலுக்கு பின்னாடி இப்படி ஒரு அர்த்தமா ? 

நம்ம அனைவருமே பள்ளியில்  படிக்கும் போது புத்தகத்துல  ஒட்ட  லேபில் வாங்கியிருப்போம். அந்த லேபில் தான் நமக்குத் தெரியும். ஆனா லேபிலுக்கு பின்னாடி நாம் நினைத்தே பார்க்காத ஒரு அர்த்தம் இருக்கு. வடசென்னை பகுதிகளில் லேபிலுக்கு அர்த்தமே வேறு . இப்ப இணையத்துல இது சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ தான் பயங்கரமா வைரலாகிட்டு வருது.   

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில கூடிய விரைவில் வெளியாக இருக்கும்  சீரிஸ் தான்   'லேபில்'.  பிரபல  நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் நடித்திருக்கும்  இந்த  சீரிஸ், பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உருவாக்கியிருக்கார். சமீபத்தில் வக்கீல் சூட்டோட ஜெய் நிக்கிற ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை குவித்தது.

தங்களோட சீரிஸ் டைட்டிலை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில்  இந்த டீம் ரெடி பண்ண வீடியோ, நாம் ஆச்சரியப்படுறம் அளவுக்கு  ஒரு தகவலை கொண்டு வந்திருக்கு.  லேபில்னா என்னனு பொதுமக்கள் கிட்ட இவங்க கேட்ட கேள்வியும் அதற்கு பொதுமக்கள் தந்த பதிலும் தான் இப்ப வைரலாகியிருக்கு.  லேபில்னு சொன்னவுடனே நமக்கு  ஞாபகம் வர்றதெல்லாம் புக், கவர்ல ஒட்டற தான். ஆனா அதோட அர்த்தமே வேற. 

இந்த வீடியோவுல ஆரம்பத்துல,  பொது மக்கள்கிட்ட கேபிலுக்கு அர்த்தம் கேட்க  அவங்க எல்லாருமே போஸ்டர், பாட்டில்ல நோட்ல ஒட்டற லேபிள் பத்தி சொல்றாங்க. ஆனா அடுத்து வந்த தகவல் தான் ஆச்சர்யம். இந்த வீடியோல வட சென்னை மக்கள் லேபிலுக்கு உண்மையான  அர்த்தம் சொல்லிருக்காங்க. லேபில் என்பது ஒரு பிராண்ட். அது ஒரு மனிதனுக்கான அடையாளம்,   க்ரைம்ல  பெரிய ஆளையும்,  பெரிய பெரிய சம்பவங்கள் பண்ணின ஆளையும் தான் லேபில்னு சொல்வாங்க.  ஏரியாவில பெரிய ஆள தான் லேபிள்னு சொல்லுவாங்க. இந்த புதிய தகவல் தான் இப்ப இணையம் முழுக்க வைரலாகிட்டிருக்கு. லேபிலுக்கும் இந்த சீரிஸுக்கும் என்ன சம்பந்தம் என்பது கூடிய சீக்கிரம் தெரிஞ்சுடும். 

கனா படம் மூலம் பலரையும்  கவனிக்க வச்ச அருண் ராஜா காமராஜ்,   முதல் முறையா இந்த சீரிஸ இயக்கியிருக்கார்.  இந்த சீரிஸோட கூடுதல்  திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியிருக்கார்.

இந்த சீரிஸுக்கு சாம்.சி.எஸ்.  இசையமைக்க, ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்திருக்கார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட  நான்கு பாடலாசிரியர்கள்  இந்த சீரிஸுக்கு  பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை  அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து  நடித்துள்ள இந்த சீரிஸை, கூடிய விரைவில லேபில் ச் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில   பார்த்து ரசிக்கலாம்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com