போட்டோஷூட் நடத்திய லேடி சூப்பர் ஸ்டார்..இணையத்தை கலக்கிய அழகிய புகைப்படங்கள்...!!

பிரபல விளம்பர படத்திற்காக  போட்டோஷூட் நடத்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அழகிய புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
போட்டோஷூட் நடத்திய லேடி சூப்பர் ஸ்டார்..இணையத்தை கலக்கிய அழகிய புகைப்படங்கள்...!!
Published on
Updated on
1 min read

தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. ‘ஐயா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி அடுத்தடுத்து சந்திரமுகி, கஜினி, பில்லா என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்து வெளியான ஐயா, சந்திரமுகி, பில்லா ஆகிய படங்கள்  நல்ல வரவேற்பை பெற்றதால் ரசிகர்கள் நீங்கா இடம் பிடித்தார். 

அதுமட்டுமில்லாமல், நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகை நயன்தாரா அறம், டோரா, கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இவருடைய நடிப்பில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் ஆகிய படங்கள் தமிழில் உருவாகி வருகிறது. அதே போல் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் திரைப்படமும், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் எனும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், மலையாளத்தில் உருவாகி வந்த கோல்ட் படத்தின் படப்பிடிப்பையும் நயன்தாரா முடித்துள்ளார்.

அவ்வப்போது,படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வந்த நடிகை நயன்தாரா, தற்போது பிரபல விளம்பர படத்திற்காக போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார். அந்த அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com