ஒரு மணி நேரம் உங்களால சும்மா இருக்க இருக்க முடியுமா அப்டினு திரைப்படங்களில் வரக்கூடிய வடிவேலு காமெடியை பார்த்திருப்போம். அப்படி ஒரு வினோதமான போட்டி தான் ஆப்பிரிக்காவில் உள்ள மாண்டெனெக்ரோவில் நடைபெற்று வருகிறது
அப்படி “சோம்பேறி குடிமகன்” என்ற தலைப்பில் உண்மையிலேயே 24 மணி நேரமும் படுத்தே இருக்க வேண்டும் என்று விநோதமான ஒரு போட்டியானது தென் ஆப்பிரிக்காவில் உள்ள மாண்டெனெக்ரோவில் நடைபெறுகிறது.
தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாண்டெனெக்ரோவில் ”சோம்பேறி குடிமகன்” என்ற பட்டத்த வெல்வதற்காக விநோதமான முறையில ஒரு போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் எந்த வேலையும் செய்யாமல் 24 மணி நேரமும் மெத்தையில் படுத்தே இருக்க வேண்டும் என்பதே இந்த போட்டியின் முக்கியமான விதி ஆகும்.
8 மணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடங்கள் கழிவறைக்கு செல்வதற்க்காக மட்டுமே அவர்கள்அணுமதிக்கப்படுவார்கள். அதே போல மற்ற நேரங்களில் நிற்கவோ அல்லது உட்காரவோ அணுமதி இல்லை. அப்படி செய்தால் அவர்கள் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அதே சமயம் போட்டி சமயத்தில் புத்தகம் படித்தல், செல்போன் , லேப்டாப் போன்றவை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள் அதுவும் படுத்துக் கொண்டு மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் இந்த போட்டியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டும் இந்த போட்டியில் தொடர்ந்து வருகின்றனர். மேலும் இந்த போட்டியில் வெற்றி பெரும் வெற்றியாளருக்கு 1000 யூரோக்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பீட்டில் இது கிட்டத்தட்ட 88,000 ரூபாய் ஆகும்.
இதையும் படிக்க || சிவகங்கை மக்களின் கவனத்திற்கு... மகளிர் உரிமைத்தொகையின் உதவி மையம்!!