தல தோனியை சந்திப்பதற்கு திடீரென விசிட் அடித்த நடிகர் சியான் விக்ரம்!!

தல தோனியை சந்திப்பதற்கு திடீரென விசிட் அடித்த நடிகர் சியான் விக்ரம்!!
Published on
Updated on
1 min read

கிரிக்கெட் ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவர் தான் எம்.எஸ்.தோனி. இவருடைய ஆட்ட திறமையால் அனைவரையும் கட்டி போட்டவர். தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து சிஎஸ்கே அணி வீரர்களின் ஏலம் தொடர்பாக ஆலோசனை செய்ய சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னைக்கு வருகை புரிந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சென்னைக்கு வந்த தோனியை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் திடீரென நேரில் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்குமுன்னர் தோனி சென்னை வந்திருந்தபோது தளபதி விஜய்யை சந்தித்திருந்த நிலையில், தற்போது சியான் விக்ரமை சந்தித்து உள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com