

விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து வழக்கு எப்படி பெரிதாக பேசப்பட்டதோ அதைவிட பெரிதாக தற்போது சங்கீதா அந்த விவாகரத்து மனுவை வாபஸ் வாங்கியது பேசப்பட்டுவருகிறது. நேற்றையதினம் (07/08/2026) விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த விவாகரத்து வழக்கினை விசாரிக்கவிருந்த நிலையில், முதல்வர் விஜய்யின் மனைவி அந்த விவாகரத்து மனுவை வாபஸ் வாங்கியுள்ளார்.
விஜய்-சங்கீதா முதல் சந்திப்பு: 1996ம் ஆண்டு வெளியான, விஜய்யின் திருப்புமுனைப் படமான 'பூவே உனக்காக' திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட சங்கீதா, விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க நினைத்து லண்டனில் இருந்து சென்னைக்குப் பயணம் செய்தார். அப்போது, நடிகராக இருந்த விஜய்யை சந்தித்து ஒரு 'ஃபேன் கேர்ள்' தருணத்தை உருவாக்கி அவரது நடிப்பைக்குறித்து பேசி வலது தெரிவித்தார். அப்போது நடிகர் விஜய், அவரது பெற்றோரை சந்திக்க வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா சந்திரசேகர் அவரை சந்தித்துள்ளார். அவர்களுக்கு சங்கீதாவை மிகவும் பிடித்திருந்ததால், இந்த சந்திப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்தனர். அந்த அடுத்தகட்டம் அவர்கள் வாழ்வின் முக்கியமான கட்டமாகவே அமைந்தது.
விஜய்-சங்கீதா திருமணம்: அடுத்த கட்டமாக அந்த சந்திப்பு திருமணத்தை நோக்கி சென்றது. 1999-ம் ஆண்டில் அவர்களுக்கு திருமணம் சென்னையில் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் நடிகர் விஜய்யுடன் சிறு வேடங்களில் அவருடன் திருப்பாதங்களில் நடித்துள்ளனர். மேலும், விஜய் மற்றும் சங்கீதா தம்பதிகள் 2000-களின் தொடக்கத்தில் சில நேர்காணல்களும் கொடுத்துள்ளனர். அவர்களின் வாழ்வில் நடந்த சில அழகான தருணங்களை அவர்கள் அதில் பகிர்ந்துள்ளனர். மேலும், அது தற்போது வரை ரசிகர்களால் ரசிக்கக்கூடிய ஒரு நேர்காணலாக பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் விஜய்யின் திரைப்பட இசைவெளியீட்டு விழாவிற்கு தம்பதிகளாகவே வருவர். அவ்வப்போது, அவர்கள் இருவரும் பார்த்துக்கொள்ளும் அந்த வினாடிகளுக்கு எடிட் போட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தவண்ணம் இருந்தனர்.
விவாகரத்து விவகாரம்: விஜய் - சங்கீதா தம்பதிகள் வெகுநாட்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறி அவ்வப்போது வதந்திகள் பரவிவந்த நிலையில், திடீரென ஒரு நாள் பிப்ரவரி 2026, 24 அன்று சங்கீத செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தங்களது திருமணத்தை ரத்து செய்யவேண்டி வழக்கு ஒன்றினை தொடுத்திருக்கிறார் என்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இது பெரும் பேசுபொருளாக மாறியது. மேலும், அதில் பல குற்றசாட்டுகளை முன்னிறுத்தி அவர் வழக்கினை தொடுத்திருந்தார். இந்த வழக்கானது, பரவலாக விவாதத்திற்கு உள்ளானது.
இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, முதல்வர் விஜய்யின் பணிச்சுமை, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி காணொலி வாயிலாக விசாரணையில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என இருதரப்பு வழக்கறிஞர்கள் தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், கடந்த (ஜூன் 15) ஆம் தேதி இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுடன், இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை (ஆகஸ்ட் 7) தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், நேற்று (07/08/26) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது, விஜய் தரப்பில் வழக்கை ஒத்திவைக்கக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், அதற்கு சங்கீதா தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வழக்கை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சங்கீதாவிடம் Zoom காணொலி அழைப்பு மூலம் நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் சிறிது நேரத்தில், இந்த விவகாரத்து மனுவை திரும்பப்பெற்றார். இந்த செய்தியானது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடையே கொண்டாடக்கூடிய ஒரு செய்தியாக பார்க்கப்பட்டது.
சேர்ந்து வாழ போகிறார்களா?: தற்போது விஜய் - சங்கீதா தம்பதிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 25 அன்று இருவருக்கும் 27- வது திருமணநாள் வரவிருக்கிறது. எனவே, இருவரும் அந்த நாளில் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பிருப்பதாக பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது. தற்போது இந்த விவாகரத்து வழக்கினை திரும்ப பெற்றுள்ள நிலையில், சென்னைக்கு வந்து மீண்டும் சங்கீதா தனது கணவர் முதலமைச்சர் விஜய்யுடன் சேர்ந்து வாழ்வார் என்று கூறப்பட்டுவருகிறது. மேலும், தங்களது திருமண நாளில் மீண்டும் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்களா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்