
நடிகை மாளவிகா மோகனன் தனது நண்பருக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவர் தனது நண்பரை ஐட்டம் பாம் என குறிப்பிட்டுள்ளார்.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மாஸ்டர் படத்தி விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தினார். இதனை தொடர்ந்து தற்போது தனுஷுடன் டி43 என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.
இந்த நேரத்தில் தனது இன்ஸ்டாகிராமில் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் ஹைலைட் என்றவென்றால், அவரது நண்பரின் இன்ஸ்டா ஐடியின் பெயர் ஐட்டம் பாம் என்பது தான்.
மாளவிகாவின் நண்பரான அபினவ் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பெரிய வாழ்த்து செய்தியுடன் சேர்த்து 24 மணி நேரமும், 365 நாட்களும் என்னுடன் இருப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
மாளவிகா பதிவிட்டுள்ள சில புகைப்படங்களில், அபினவ் எனும் ஐட்டம் பாம் பார்ப்பதற்கு பெண் உருவ அமைப்பை கொண்டுள்ளதால், நெட்டிசன்கள் மாளவிகா மோகனனை ஓரினச் சேர்க்கையாளரா நீங்கள்? என வெளாசி வருகின்றனர்.