'மாமன்னன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு...

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, அவரது படமான ‘மாமன்னன்’ -னின் சிறு திரைத்துளியை படக்குழுவினர் வெளியிட்டனர்.
'மாமன்னன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு...
Published on
Updated on
1 min read

அரசியல் தளத்தில் தற்போது மக்களின் ஆதரவைப் பெற்று வரும் உதய், தனது திறனை முதலில் சினிமா உலகிலேயே காட்டினார். தயாரிப்பாளராக பெரும் பேரு பெற்று, சினிமா உலகையே தற்போது ராஜ்ஜியம் செய்து கொண்டிருக்கிறார் உதயநிதி. இவருக்கு நேற்று பிறந்தநாள் கண்ட நிலையில்ல் உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தின் ஒரு சிறிய திரைத்துளியி வெளியிட்டுள்ளது. இது த்ற்போது ம்கிகள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.

இயக்கினா் மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி 'மாமன்னன்' படக்குழு சார்பில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவும் இணைந்துள்ளது. 

முதன் முறையாக மாரி செல்வராஜுடன் இணைவதில் மகிழ்ச்சி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான், இந்த படத்தைப் பற்றி புகழ்ந்ததோடு, உதய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை ரஹ்மான், தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com