
‘மாநாடு’ படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். அரசியல் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், டேனியல் அன்னி போப், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதி டிரெய்லர் வெளியாக உள்ளது. மேலும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து திரையரங்கில் வெளியாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் ரிலீசாக உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.