கையில் கப்புடன் விநாயகர் முன் நிற்கும் ’மணி ஹெய்ஸ்ட்’ பிரபலம்!!வைரல் போட்டோ...

கையில் கப்புடன் விநாயகர் முன் நிற்கும் ’மணி ஹெய்ஸ்ட்’ பிரபலம்!!வைரல் போட்டோ...
Published on: 
Updated on: 
1 min read

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ‘மணி ஹெய்ஸ்ட்’ சீரிஸ் பட்டித்தொட்டியெல்லாம் மாபெரும் வெற்றியை கண்டது. ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய வரவேற்பை  பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அந்த சீரிஸில் புரபொசர் கேரக்டர் முதல் டோக்கியோ, பெர்லின், ஸ்டாக்ஹோம், நைரோபி உள்பட அனைத்து கேரக்டர்களும் ரசிகர்களை கவர்ந்தது என்பதும் இந்த தொடர் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த தொடரில் முக்கிய கேரக்டரான அதாவது ஸ்டாக்ஹோம் என்ற கேரக்டரில் நடித்த நடிகை எஸ்தர் அசிபோ புகைப்படம் ஒன்று மிகப் பெரிய அளவில் தற்போது வைரலாகி வருகிறது. அப்படி என்னதான் இருக்கு அந்த புகைப்படத்தில் என்று பார்த்தால், அந்த புகைப்படத்தின் பின்னணியில் விநாயகர் ஓவியம் ஒன்று இருக்க, அதற்கு முன் எஸ்தர் அசிபோ கையில் வைத்திருக்கும் கப்பில் தண்ணீரை ஊற்றுவது போல்  நின்று கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் அனைவரும் பாராட்டி லைக்குகளை குவித்து வருகின்றனர். உலகப்புகழ் பெற்ற ஒரு நடிகை இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுவது பாராட்டுக்குரியது என பலரும்  கமெண்ட்ஸில் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த புகைப்படத்திற்கு இந்தியாவில் தான் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

சமீபத்தில் உலக புகழ்பெற்ற  ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 2023 ஆம் ஆண்டு இந்த தொடரின் கேரக்டர்களில் ஒன்றான பெர்லின் வாழ்க்கை வரலாற்று கதை குறித்த தொடர் ஆரம்பமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com