வாழு, வாழ விடு.... நடிகர் அஜித் வெளியிட்ட மாஸ் அட்வைஸ் 

சினிமாவில் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு நடிகர் அஜித், ஒரு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாழு, வாழ விடு.... நடிகர் அஜித் வெளியிட்ட மாஸ் அட்வைஸ் 
Published on
Updated on
1 min read

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித், தற்போது 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகர் அஜித், தனது பிஆர்ஓ மூலம் மெசேஞ் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது: “ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் நான் முழு மனதாக ஏற்கிறேன். வாழு, வாழ விடு. என்றும் அளவற்ற அன்புடன் அஜித் குமார்” என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com