‘Mass Entertainer’ - ‘கூலி’ முதல் ரிவ்வியூவே மாஸ்! ஹைப்பை ஏற்றிய உதயநிதி!!

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975 -ஆம் ஆகஸ்ட் 15 வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ ...
 ‘Mass Entertainer’ - ‘கூலி’ முதல் ரிவ்வியூவே மாஸ்! ஹைப்பை ஏற்றிய உதயநிதி!!
Published on
Updated on
1 min read

ரஜினி திரையுலகத்திற்கு வந்து இதோடு 50 ஆண்டுகள் ஆகின்றது. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975 -ஆம் ஆகஸ்ட் 15 வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் தான் ரஜினி அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த வரும் திரைத்துறையில் அவருக்கு பொன் விழா வருடம்.

இந்த நிலையில்தான் அவரது 171 -ஆவது திரைப்படமாக கூலி நாளை  வெளியாக உள்ளது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அமீர்கான், சத்யராஜ், உப்பேந்திரா, நாகர்ஜுனா, சௌபின் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்போடு நாளை திரைக்கு வரவிருக்கிறது இப்படம்.

இந்நிலையில் திரைப்பிரபலங்கள்பலரும் அரசியல் தலைவர்களும்  ரஜினியின் 50 -ஆவது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, “தனது தனித்துவமான நடிப்பால், தனக்கே உரிய ஸ்டைலால் தமிழ் திரையுலகில் 50 வருடங்களை நிறைவு செய்த சகோதரர் ரஜினி காந்த் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்,

தொடர்ந்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாளை வெளியாகும் அவருடைய 'கூலி' திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

'கூலி' மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் சார், சன் பிக்சர்ஸ், சத்யராஜ் சார், லோகேஷ் கனகராஜ், அமீர்கார் சார், சகோதரர் அனிருத், ஸ்ருதிஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என X தலத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே கூலி படம் தான் தமிழ் சினிமாவில் 1000 கோடி கடந்த படமாக அமையும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து வலுத்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com