#Breaking | மாயமான மீரா மிதுன்... அவதூறு பேசியதும் காணாமல் போனதால் பரபரப்பு...

நடிகை மற்றும் மாடலழகியான மீரா மிதுன் திடீரென மாயமாகியுள்ளதாக் அதகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையாகியுள்ளது.
#Breaking | மாயமான மீரா மிதுன்... அவதூறு பேசியதும் காணாமல் போனதால் பரபரப்பு...
Published on
Updated on
1 min read

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக வீடியோ ஒன்றை பதிவிட்ட நடிகை மற்றும் மாடலழகி மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மாயமாகியுள்ளார்.

இன்று வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில், திடீரென அவர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வழக்கின் விசாரணையை நவம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவரது செல்ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முதன்முறை அல்ல. இது வரை அவர் மீது எப்போழுது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அவர் மாயமாவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்ஹினரை கண்காணித்து வருவதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தகவலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, தனது இன்ஸ்டாகிராமில் லைவ் போய்க்கொண்டிருக்கும் போது, பட்டியலினத்தவர்களைக் குறித்து, தவறாக மேற்கோள் காட்டிய நிலையில், ஒரு வீடியோ மீண்டும் அவர்களை அவதூறாக பேசிய படி வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் மீதான் அவழக்கை தவிர்க்க இப்படி மாயமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இவர் இது போலவே சர்ச்சையாக பேசியதற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமைருஷ்ணன்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com