"ஈஷா அம்பானி ஆடை தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்டதா?" மெட் காலா-வில் கவனம் ஈர்த்த இந்திய பிரபலங்கள்

இந்த ஆண்டிற்கான 'மெட் காலா 2026' நியூயார்க் நகரத்தில் வெகுவிமர்சையாக நடந்தது. இதில் அம்பானியின் மகள் தொடங்கி பல இந்திய பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களது கண்கவர் ஆடைகளை காட்சிப்படுத்தினர்.
Met gala 2026
Met gala 2026Met gala 2026
Published on
Updated on
2 min read

'மெட் காலா' ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று நியூயார்க் நகரத்தில் உள்ள 'மெட்ரோபொலிட்டன்' கலை அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது. மேலும், இது அருங்காட்சியகத்தின் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் நடைபெறுகிறது. இதில் அழைப்பு பெற்றவர்கள் தங்களது ஆடைகள் மூலம் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அதாவது, மெட் காலா-வில் ஒரு 'தீம்' கொடுக்கப்படும் அதன் அடிப்படையில் விருந்தினர்கள் தங்களது ஆடைகளை அணிந்து வரவேண்டும்.

கலந்து கொண்ட இந்திய பிரபலங்கள்: இந்த மெட் காலா-வில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அதில் முக்கியமாக, கரண் ஜோஹர் கலந்துகொண்டார். இவர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய பிரத்யேக ஆடையை அணிந்து வந்தார். இந்திய தொழிலதிபர் இஷா அம்பானி முழு தங்க நிற ஆடை, நவீன உயர் ரக ஆடை வடிவமைப்பையும் அரச கம்பீரத்தையும் இணைத்திருந்தது. அவரது புடவை தூய தங்க நூல்களால் நெய்யப்பட்டதாகவும், அதில் 200-க்கும் மேற்பட்ட வைரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வோக் இதழின்படி, இது 50-க்கும் மேற்பட்ட கைவினைஞர்களால் கையால் நெய்யப்பட்டு, 1,200 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்து முடிக்கப்பட்டது. இதில் மேலும் பல இந்தியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மெட் காலா என்பது என்ன?: மெட் காலா, அப்போது புதிதாக நிறுவப்பட்ட ஆடை நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்கும் அதன் வருடாந்திர கண்காட்சியின் தொடக்கத்தைக் குறிப்பதற்கும் ஒரு தீர்வாக 1948-ல் நிறுவப்பட்டது. முதல் மெட் காலா, தலா ஐம்பது டாலர் விலையுள்ள நுழைவுச்சீட்டுகளுடன் ஒரு நள்ளிரவு விருந்தாக நடத்தப்பட்டது. வோக் பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியரான டயானா வ்ரீலேண்ட் , ஆடை நிறுவனத்திற்கு விட்டுச்சென்ற மரபுதான் இன்றைய மெட் காலாவை உருவாக்கியது. 1973 முதல், மெட் காலா ஒரு ஆடம்பரமான, பிரம்மாண்டமான நிகழ்வாக அறியப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பெரும்பாலும் சமூகப் பிரமுகர்களும், ஃபேஷன் துறை வல்லுநர்களும் கலந்துகொண்டனர். அதன் பின்பு, 1973-ல், டயானா வ்ரீலேண்ட், மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகத்துடன் இணைந்து, இந்த வருடாந்திர விழாவை சர்வதேச கவனத்தை ஈர்க்கும் ஒரு ஆடம்பரமான நிகழ்வாகப் புதுப்பித்து மேம்படுத்தினார்.

அதன் பிறகே 1974-ம் ஆண்டு முதல் கருப்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1990-களில்தான் இது உலகளவில் ஒரு பெரும் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. அதாவது, சிவப்பு கம்பள விரிப்பில், பிரபலங்களை அழைப்பது நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும், கொடுக்கப்பட்ட கருப்பொருளுக்கு ஏற்ப தனித்துவமான ஆடை வடிவமைப்புகளை உருவாக்க வேண்டி வடிவமைப்பாளர்களுக்கு சவால் விடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டாலர்களைத் திரட்டுவதன் மூலம், ஆடை நிறுவனத்திற்குள் கலையை ஆதரிப்பதிலும் பாதுகாப்பதிலும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இந்த நிகழ்விற்கான ஒரு இரவின் விலை, அதாவது ஒரு டிக்கெட் $100,000 (தோராயமாக ₹84 லட்சம்) என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு 'உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆடை' என்று கருப்பொருளும் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 'ஆடைக்கலை' என்ற கருப்பொருளில் கொடுக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் என்ன?: தனி உரிமையை பாதுகாக்கும் பொருட்டு மெட் காலா-வில் தோலை பேசிகள் தடை செய்யப்பட்டுள்ளன. கொடுக்கப்படும் கருப்பொருள் அடிப்படையிலேயே விருந்தினர்கள் ஆடைகள் அணிந்து வர வேண்டும். நிகழ்விற்கு வருபவர்கள் புதிய நபர்களோடு பழகுவதை ஊக்குவிக்க தம்பதிகளுக்கு தனி தனியான இருக்கை ஏற்பாடு செய்யப்படுகிறது. விருந்தினர்கள் புகை பிடிக்கவும், வெங்காயம், பூண்டு போன்ற நெடி ஏற்படுத்தும் உணவுப்பொருட்களை உண்டு வரவும் தடை செய்யப்பட்டுள்ளது. கலைப்பொருட்களை சேதப்படுத்தக்கூடிய பெரிய பொருட்கள் மற்றும் பெரிய பைகள், பயணப்பெட்டிகள் போன்றவை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com