"ஜெயிலர் 3-ல் வேலை செய்ய மாட்டேன்" மோகன்லாலின் டிசைனர் பகீர்.. "எங்கள் சூப்பர் ஸ்டார் காட்சிகளை வெட்டுவது.." நியாயம் கேட்கும் மலையாள ரசிகர்கள்!

மோகன்லால் நடித்த காட்சிகள் படத்தில் வெட்டப்பட்டுள்ளதாக மலையாள ரசிகர்கள் அதிருப்தியை எழுப்பியுள்ளனர்.
"Won't Work in Jailer 3": Mohanlal's Designer Speaks Out Over Cut Scenes as Fans Outraged
"ஜெயிலர் 3-ல் வேலை செய்ய மாட்டேன்" மோகன்லாலின் டிசைனர் பகீர்.. "எங்கள் சூப்பர் ஸ்டார் காட்சிகளை வெட்டுவது.." நியாயம் கேட்கும் மலையாள ரசிகர்கள்!
Published on: 
Updated on: 
1 min read

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட நடிகர்களின் கேமியோ இந்த வெற்றிக்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது.

கேரளாவில் மோகன்லாலின் மேத்யூ கதாப்பாத்திரம் ஜெயிலர் முதல் பாகத்திலேயே கொண்டாடப்பட்டதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த சூழலில் மோகன்லால் நடித்த காட்சிகள் படத்தில் வெட்டப்பட்டுள்ளதாக மலையாள ரசிகர்கள் அதிருப்தியை எழுப்பியுள்ளனர்.

மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன், இரண்டாம் பாகத்தில் அவரது பாத்திரத்துக்கு அதிக காட்சிகள் இருந்ததாகக் கூறியுள்ளார்.

மோகன்லாலின் காட்சிகளை நீக்கியதற்காகத் படக்குழுவைக் கண்டித்த அந்த வடிவமைப்பாளர், ஒருவேளை மூன்றாம் பாகம் வந்தாலும் அதில் தான் பணிபுரிய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "படமாக்கப்பட்ட காட்சிகள், டிரெய்லரில் வெறும் 2 வினாடிக் காட்சியாகச் சுருக்கப்பட்டபோதும், எங்கள் வேலையின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது.

ஆனால் படம் வெளியானபோது, ​​மோகன்லால் சாரின் மூன்று தனித்துவமான தோற்றங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டன, அந்த டிரெய்லர் காட்சியும் கூட வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

சினிமாவில் என் அனுபவத்தின்படி, மோகன்லால் சார் போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெட்டுவது தேவையற்றது.

எங்கள் சூப்பர் ஸ்டார் இப்படிச் சுருக்கப்படுவதைப் பார்க்கும்போது, ​​ஒருவேளை இதன் அடுத்த பாகம் வந்தால், நான் அதில் பணியாற்ற மாட்டேன். என்னை நம்பிய அனைவரிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.\

நான் சலுகைகள், லாபங்கள், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் கிளப்புகள் அல்லது நட்சத்திர அந்தஸ்துக்காக நிற்பதில்லை. நான் முழுக்க முழுக்க ரசிகர்களுக்காகவும், என் கலையை நேசிப்பவர்களுக்காகவும், மோகன்லால் சாருக்காகவும் மட்டுமே நிற்கிறேன். என் பயணத்தில் எப்போதும் துணை நின்றதற்கு நன்றி." எனக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து மலையாள ரசிகர்கள் மோகன்லால் காட்சிகள் வெட்டப்பட்டதற்கு நியாயம் கேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

"Won't Work in Jailer 3": Mohanlal's Designer Speaks Out Over Cut Scenes as Fans Outraged
கோடிகளைக் குவித்த ஜெயிலர் 2; ஆனாலும் 'லோகேஷ்' படத்தை விட பின்தங்கிய நெல்சன்.. முதல்நாள் வசூல் எவ்வளவு?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com