
ஓடிடி தளத்தில் வெளியான 'தி பேமிலி மேன் 2' வெப் தொடரில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள நடிகை சமந்தா, தற்போது வரலாற்று முக்கியத்துவம் கொண்ட 'சாகுந்தலம்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
முதலில் இப்படத்துக்காக சகுந்தலா கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோர் முதலில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இறுதியில் சமந்தாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது இப்படம் குறித்து நடிகை சமந்தா கூறியுள்ளதாவது
"என்னுடைய இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளேன். அதில், சாகுந்தலம் திரைப்படத்தில் நான் இளவரசியாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.10ஆண்டுகால என் திரையுலக பயணத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு அது தற்போது நிறைவேறி உள்ளது. இந்த படத்தில் நிச்சயம் என்னால் 100 சதவீதத்தை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.