"எனது வாழ்க்கைக் கதைக்கு தேசம் ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சி" முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்!

"எனது வாழ்க்கைக் கதைக்கு தேசம் ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சி" முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்!

2021-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான  தேசிய  திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

கடந்த 2021ல் வெளியான திரைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில், நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படத்திற்கு சிறந்த திரைப்படம் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.

இந்நிலையில், தனது வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்ட ராக்கெட்ரி திரைப்படத்திற்கு விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொிவித்துள்ளாா். 

இது குறித்து அவர் கூறியதாவது, "சந்திரயானின் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. எனது வாழ்க்கைக் கதைக்கு தேசம் ஒப்புதல் அளித்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com